இலங்கை
ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை!

ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்குச் செல்கின்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி நிதி அமைச்சர் ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.
ஜனாதிபதி அநுர தலைமையிலான குழுவினர் தமது இந்தியப் பயணத்தின்போது, இந்தியப் பிரதமர் மோடி, இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இலங்கையின் கடற்பரப்பில் தொடர்ச்சியாக அத்துமீறி இடம்பெறும் தமிழக மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கை என்பன தொடர்பில் இரண்டு இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் முக்கியமான கலந்துரையாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில், புதிய அரசமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அது தொடர்பிலும் தமது தரப்புத் தெளிவுபடுத்தலை ஜனாதிபதி அநுர வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.