Connect with us

சினிமா

ஜேசுதாஸின் பல வருட ஆசையை நிறைவேற்றிய இளையராஜா.. சிம்பொனி எப்போது வெளியீடு?

Published

on

Loading

ஜேசுதாஸின் பல வருட ஆசையை நிறைவேற்றிய இளையராஜா.. சிம்பொனி எப்போது வெளியீடு?

இளையராஜா சிம்பொனி நிறைவு செய்ததாக அவரே மலையாளத்தில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதுகுறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.

பாரதிராஜாவின் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அதன் பின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

Advertisement

இதற்காக தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். அவரது மகன் யுவன், கார்த்திக் ராஜா இசையமைப்பாளர்களாக பணியாற்றி வந்தாலும், 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக இளையராஜா வலம் வருகிறார்.

பாலாவின் படம் இளையராஜாவின் இசையில் வெளியான 1000 வது படமாகும். தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி, பாடல் பாடுவது, உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 பட த்திற்கு இசையமைத்து பாடல்களை ஹிட்டாக்கிய இளையராஜா, விடுதலை 2விலும் சூப்பர் பாடல்களை கொடுத்துள்ளார். பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

Advertisement

இளையராஜா மலையாளத்தில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஜேசுதாஸ் அண்ணன் என்னிடம், சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி இசை கம்போஸ் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நான் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். இப்போது சிம்போனி இசையமைத்துள்ளேன். அண்ணன் ஜேசுதாஸ் கூறிய அந்த பணி முடிந்தது. சிம்பொனிக்காக, முழுமையாக எழுதி, அதை இசையமைத்து வைத்துள்ளேன் என்று அண்ணன் ஜேசுதாஸுக்கு தெரிக்கிறேன்.

நீங்கள் கூறிய வேலை கடவுளின் அணுக்கிரகத்துடன் முடிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருவாசகம் உள்ளிட்டவற்றிற்கு இசையமைத்த இளையராஜா, 1993 லண்டனில் சிம்பொனி இசையமைத்தார், அது வெளியாகவில்லை என தெரிகிறது.

Advertisement

பாடகர் ஜேசுதாஸ் வலியுறுத்தியதை அடுத்து, தற்போது பிரத்யேகமாக சிம்பொனி இசையமைத்துள்ளார். அது வரும் ஜனவரியில் வெளியாகும் என இளையராஜா ஏற்கனவே ஒரு வீடியோவில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன