இலங்கை
தனது தொழிலை மறைக்கிறார்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

தனது தொழிலை மறைக்கிறார்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தகவல், தொழிநுட்ப பொறியியலாளர் என்று விளம்பரப்படுத்தி கண்டியில் போட்டியிட்டு வென்ற தனுர திசாநாயக்க நாடாளுமன்ற இணையத்தில் தொழில் என்ன என்ற கேள்விக்கு ”வேறு ‘ என்று பதிலளித்துள்ளார்.
மேலும், பொறியியலாளர் என்று விளம்பரப்படுத்தி கேகாலையில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற கோசல ஜயவீர, உதவிப் பொறியியலாளர் என்று நாடாளுமன்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைக்கேடான முறையில் விளம்பரப்படுத்தி போட்டியிட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுப்பியுள்ளதாக சிவா ராமசாமி என்பவர் முகநூலில் குறித்த பதிவையிட்டுள்ளார்.