இந்தியா
திருவண்ணாமலையில் தரிசனம் செய்ய ஒரு கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்த பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தரிசனம் செய்ய ஒரு கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்த பக்தர்கள்..!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் (டிச.13ஆம் தேதி) திருவண்ணாமலை தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நேற்று (டிச.14ஆம் தேதி) 2ஆவது நாளாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகை மாத பௌர்ணமி நாள் என்பதால், நேற்று (டிச.14ஆம் தேதி) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிரிவலம் சென்றனர்.
இரவு முழுவதும் பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் கிரிவலம் சென்று கொண்டிருந்ததால், திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவையொட்டி, அண்ணாமலையார் கோயில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.