இலங்கை
நாளைமறுதினம் நியமிக்கப்படவுள்ள புதிய சபாநாயகர்!

நாளைமறுதினம் நியமிக்கப்படவுள்ள புதிய சபாநாயகர்!
இலங்கை நாடாளுமன்றத்துக்கு, நாளைமறுதினம் புதிய சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வித் தகைமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, சபாநாயகர் அசோக ரன்வல பதவியில் இருந்து விலகியுள்ள நிலையிலேயே, அவருக்குப் பதிலாக நாளைமறுதினம் புதன்கிழமை புதிய சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூடும்போது முதல் நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும். ஆதலால், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஸ்மன் நிபுணஆராச்சி ஆகிய இருவரில் ஒருவர் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலியின் பெயரும் சபாநாயகர் தெரிவில் பரிசீலிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பிறிதொரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.