Connect with us

தொழில்நுட்பம்

புத்தாண்டு ஸ்பெஷல்… ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்திய ஜியோ… விவரங்கள் இதோ…!

Published

on

புத்தாண்டு ஸ்பெஷல்... ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்திய ஜியோ... விவரங்கள் இதோ...!

Loading

புத்தாண்டு ஸ்பெஷல்… ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்திய ஜியோ… விவரங்கள் இதோ…!

Advertisement

அதுமட்டுமின்றி ஷாப்பிங் வெப்சைட்ஸ், ஃபுட் டெலிவரி ஆப்ஸ் மற்றும் விமான முன்பதிவு தளங்களில் தள்ளுபடிகள் உட்பட ரூ.2,150 மதிப்புள்ள கூடுதல் பலன்களையும் பெற யூஸர்களுக்கு ஜியோவின் நியூஇயர் வெல்கம் பிளான் வாய்ப்பளிக்கிறது. இந்த பிளான் குறிப்பிட்ட சில யூஸர்களுக்கு ஆண்டுக்கு ரூ.400 சேமிப்பாக இருக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது. புத்தாண்டையொட்டி ஜியோ அறிவித்துள்ள சலுகைகளைப் பெற ஆர்வமுள்ள ஜியோ யூஸர்கள் ஜனவரி 11, 2025-க்குள் இந்த பிளானை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள இந்த ஸ்பெஷல் ப்ரீபெய்ட் பிளான் தற்போது இந்தியாவில் ரூ.2,025 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த பிளான் மூலம் கிடைக்கும் பெனிஃபிட்ஸ் ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 200 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். டிசம்பர் 11 முதல் கிடைக்கும் இந்த ஸ்பெஷல் பிளானை நாட்டில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களும் ஜனவரி 11, 2025 வரை பெறலாம்.

Advertisement

ரிலையன்ஸ் ஜியோ புதிதாக அறிவித்திருக்கும் இந்த பிளான் வழங்கும் நன்மைகளில் அன்லிமிட்டட் 5G டேட்டா சப்போர்ட்டும் அடங்கும். நிறுவனத்தின் 5G கனெக்டிவிட்டி வாடிக்கையாளர் இருக்கும் பகுதியில் 5G நெட்வொர்க் கிடைப்பதை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 2.5GB டேட்டா வீதம் இந்த பிளானில் மொத்தம் 500GB 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும், யூஸர்கள் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச SMS-களுக்கான அக்சஸை பெறுவார்கள். இந்த ரூ.2,025 ரீசார்ஜ் பிளான் மூலம், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud உள்ளிட்டவற்றின் இலவச சப்ஸ்கிரிப்ஷனை அனுபவிக்க முடியும். தவிர இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் பிளானோடு யூஸர்கள் ரூ.2,150 மதிப்புள்ள தகுதியான பிராண்டுகளின் கூப்பன்களையும் பெறலாம். இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மில் குறைந்தபட்சம் ரூ.2,500 ஷாப்பிங் செய்தால் யூஸர்கள் ரிடீம் செய்து கொள்ளக்கூடிய ரூ.500 Ajio கூப்பன் இதில் அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சிறப்பு பிளானில் உள்ள மற்ற பார்ட்னர் பெனிஃபிட்ஸ்களில் ஸ்விக்கியில் குறைந்தபட்சம் ரூ.499-க்கு வாங்கினால் ரூ.150 தள்ளுபடி மற்றும் EaseMyTrip.com மொபைல் ஆப்ஸ் மற்றும் ஸ்வீப்ஸைட் மூலம் விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தால் ரூ.1,500 தள்ளுபடி ஆகியவை அடங்கும். மேற்கண்ட இந்த புதிய பிளான் ரூ.349 மாதாந்திர ரீசார்ஜ் பிளானுடன் ஒப்பிடும்போது ரூ.468 சேமிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன