Connect with us

இந்தியா

பெரியாரின் பேரன்.. காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் மறைவு

Published

on

Loading

பெரியாரின் பேரன்.. காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் மறைவு

தமிழக மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார் (75).

பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இவரது மகன் ஈ.வெ.கி. சம்பத். இவர், காங்கிரஸில் இருந்து திமுகவுக்குச் சென்றார். அண்ணாவின் தம்பிகளின் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.

Advertisement

ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அடுத்து, திமுகவில் இருந்து விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

இவரது மகன் ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன். தன் அப்பா பயணித்த காங்கிரஸில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார் அவர். 1984 ஆம் ஆண்டு முதன் முதலாகச் சத்தியமங்கலத்தில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தார். இதையடுத்து, தொடர்ந்து அரசியலில் பயணித்து முக்கிய அரசியல் பிரபலமாக வலம் வந்தார்.

1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாநில அரசியலை விட்டு விலகி மத்தியில் பங்காற்ற எண்ணி, 2004 ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார்.

Advertisement

காங்கிரஸ் ஆட்சியின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அவரது தாத்தா பெரியார், தந்தையின் செல்வாக்கு அவரை அரசியல் களத்தின் விரைவில் முன்னோக்கி நகர்த்தியது. அதன்பின், அவர் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தார்.

எனவே தன் மகன் திருமகன் ஈ.வெ.ராவை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறுத்தி, திமுக கூட்டணியில் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெறச் செய்தார்.

Advertisement

2023 ல் மாரடைப்பால் காலமானார். அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

அவ்வப்போது, அதிரடி கருத்துகள் கூறி அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார். கடந்த நவம்பர் 27 ல் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியா இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

Advertisement

வயது முதிர்வு, நோயின் தீவிரம் போன்றவற்றால் ஈவிகேஸ் இளங்கோவனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காங்கிரஸ் தலைவர், திமுகவினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இரங்கல் கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன