விளையாட்டு
யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஓய்வுக்கு பின்னர் எப்படி சம்பாதிக்கிறார்?

யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஓய்வுக்கு பின்னர் எப்படி சம்பாதிக்கிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இன்று தனது 43 ஆவது பிறந்த கொண்டாடுகிறார். டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங், தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை இந்திய அணிக்கு மறக்கமுடியாத வெற்றிகளைக் கொடுத்துள்ளார்.
அவர் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் யுவராஜ் சிங் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங், பேட்டிங்கில் துணிச்சலான ஸ்டைலுக்கு பெயர் பெற்றவர். வாழ்க்கை முறையிலும் பல இந்திய வீரர்களை விட முன்னணியில் உள்ளார். யுவராஜ் சிங் தற்போது ஒவ்வொரு மாதமும் விளம்பரங்கள் மூலம் சுமார் ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.
யுவராஜ் சிங் 12 டிசம்பர் 1981 அன்று சண்டிகரில் பிறந்தார். இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையில், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். டி20யில் 12 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனை யுவராஜ் செய்துள்ளார்.
2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றதில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பை போட்டியின் ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
2019-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி அதில் பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். அவரது தனிப்பட்ட சொத்து ரூ.50 கோடிக்கும் அதிகமாக உள்ளது. யுவராஜ் சிங்கிற்கு மும்பையில் இரண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 2013 ஆம் ஆண்டில், வொர்லியில் உள்ள ஓம்கார் 1973 என்ற சொகுசு குடியிருப்பு டவரில் ரூ. 64 கோடி மதிப்பில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார்.
அவர் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, லோம்பிரிகினி முர்சிலாகோ, பிஎம்டபிள்யூ எம்5 இ60, பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் மற்றும் ஆடி க்யூ5 உள்ளிட்ட சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார் யுவராஜ் சிங். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.