இலங்கை
300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது அதிரடி நடவடிக்கை!
நாட்டில் அரிசி கட்டுப்பாட்டு விலை விதிமுறைகளை மீறிய 300 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
இதன்படி நாளை (15-12-2024) முதல் இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.