Connect with us

இந்தியா

ADMK | அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ

Published

on

ADMK | அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ

Loading

ADMK | அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ

Advertisement

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News18

அதன் விவரம் பின்வருமாறு:

அதிமுக எம்.ஜி.ஆர். ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

டங்ஸ்டன் தொழிற்சாலைக்கான ஒப்பந்த ஏலத்தை தடுக்கத் தவறியதாக திமுக அரசை கண்டித்தும், மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் ஆலை அமைவதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார்பந்தயம் , பேனா சிலை வைப்பது பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு ஆகிய உயர்வை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றின் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும், தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக என தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன