சினிமா
Google Top 10 | 2024ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியல் இதோ..!

Google Top 10 | 2024ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியல் இதோ..!
டாப் 10 ல் முதல் இடத்தை பிடித்துள்ள படம் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவான இந்த ஹாரர் காமெடி படத்தின் முதல் பாகம் (ஸ்திரீ) 2018ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் 2வது பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘கல்கி 2898 AD’. ஜூன் 27 உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியான ‘கல்கி 2898 AD’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை குறித்து பல விமர்சனங்களும் கிளம்பியது, விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது.
விக்ரம் மாஸ்ஸி நடிப்பில் வெளியான இந்த படம் போட்டித்தேர்வுகள் எழுதுவோர் மட்டுமல்லாமல் பலருக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்தது. இந்த படமானது கடந்த ஆண்டு வெளியானாலும் பலரும் இந்த படத்தை இந்த ஆண்டு கூகுளில் தேடியுள்ளனர்.
சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில், இந்தியில் வெளியான ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பெண்களை மையமாக வைத்து பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம் பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி பெற்றது.
பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவெர்சுக்கு கீழ் உருவான படம் ‘அனுமான்’. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த யூனிவெர்சுக்கு கீழ் அடுத்ததாக ‘ஜெய் ஹனுமான்’ படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘அமகாராஜா’ திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இந்த படம் சீனாவிலும் திரையிடப்பட்டது. மேலும் Netflix ல் வெளியான இந்த படம் ஓடிடி-ல் வெளியான படங்களில் அதிகப்பேரால் பார்க்கப்பட்ட படங்களில் முதல் இடத்தில் உள்ளது.
அதே போல் கோலிவுட், டோலிவுட்-ல் கொண்டாடப்பட்ட மோலிவுட் படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் 7வது இடத்திலும், விஜயின் ‘தி கோட்’ திரைப்படம் 8வது இடத்திலும், பிரபாஸின் ‘சலார்’ திரைப்படம் 9வது இடத்திலும் உள்ளது. மேலும் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 10வது இடத்தில் பகத் பாசிலின் ‘ஆவேசம்’ படம் உள்ளது.