இந்தியா
Tamilnadu Weather | வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… நேரம் குறித்த வானிலை மையம்… தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை!

Tamilnadu Weather | வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… நேரம் குறித்த வானிலை மையம்… தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியானது இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இன்று காலை நிலவரப்படி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.