இந்தியா
அரசின் சாதனைகள்… திட்டக்குழு அறிக்கையை முதல்வரிடம் வழங்கிய உதயநிதி

அரசின் சாதனைகள்… திட்டக்குழு அறிக்கையை முதல்வரிடம் வழங்கிய உதயநிதி
மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் துணை முதல்வர் உதயநிதி மற்றும் திட்டக்குழு துணைத் தலைவரும் பேராசிரியருமான ஜெயரஞ்சன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிசம்பர் 16) வழங்கினர்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மாநிலத்தின் வளர்ச்சி, கண்காணிப்பு, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனையில் மாநில திட்டக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சனுடன் இணைந்து தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினோம்.
இவ்வறிக்கைகளில், அரசின் சாதனை திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், எண்ணும் எழுத்தும் ஆகியவை சார்ந்து ஆய்வுகள், மக்கள் கருத்துகள், பயனாளிகள் விவரம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
முதலமைச்சர் உருவாக்கிய தொலைநோக்குத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தி வருவதற்கான ஆவணமாக இந்த மதிப்பீட்டு அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கு முதலமைச்சர் வழிகாட்டலில் தொடர்ந்து அயராது உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை… வேல்முருகன் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா ஆதரவு!
அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் விஜயபாஸ்கர்