இலங்கை
இலங்கை தமிழரசு கட்சியில் மாவை உள்ளேயா? வெளியேயா?

இலங்கை தமிழரசு கட்சியில் மாவை உள்ளேயா? வெளியேயா?
மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்படும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தைத் தலைமை தாங்குபவர் தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டது.
நீண்ட நேரக் கருத்தாடல்களின் பின்னர் மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது