சினிமா
உஷாரய்யா… உஷாரு..!! த.வெ.க கட்சியில் புகுந்த ஸ்லீப்பர் செல்கள்..! விஜய்க்கு அலர்ட்

உஷாரய்யா… உஷாரு..!! த.வெ.க கட்சியில் புகுந்த ஸ்லீப்பர் செல்கள்..! விஜய்க்கு அலர்ட்
பிரபல நடிகரான இளைய தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சிறப்பாக கொண்டு நடத்தி வருகின்றார். சமீபத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது விஜய் பேசிய விஷயங்கள் அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பக்கத்தில் விஜய்க்கு உஷாரா இருக்குமாறு ஒரு எச்சரிக்கை பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.அதன்படி அவர் கூறுகையில், துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே… உங்களுடைய கட்சியை நோக்கி விரைவில் ஸ்லீப்பர் செல் ஏஜென்ட் வரவுள்ளார்… அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள்..d_i_aஉங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் அவர்கள் மூலமே லீக் செய்யப்படும்.. தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்.. எனவே படத்தில் வருவது போல நிஜத்திலும் அலர்டாக இருந்து அவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும்..தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து ஆட்சியை விட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசியில் நடந்த சில மீட்டிங்கில் தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்துதான் அவர் அவ்வாறு விட்டு விலகினார். ஆகவே விஜய் ஆரம்பத்திலையே உஷாராக இருக்குமாறு ப்ளூ சட்டை மாறன் எச்சரித்துள்ளார்.