சினிமா
நடிகர் அஜித்தின் புதிய தோற்றம், இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் அஜித்தின் புதிய தோற்றம், இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் ‘‘துணிவு’’ படத்திற்கு பிறகு மகிழ்திருமேனியின் ‘‘விடாமுயற்சி’’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘‘Good Bad Ugly’’ என இரண்டு படங்களில் பேக் டு பேக் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை. உலகளவில் அளவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
‘‘Good Bad Ugly’’ படப்பிடிப்பு மற்றும் அஜித்தின் கெட்டப் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது அஜித்தின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதை பார்த்தவுடன் ‘‘அமர்க்களம்’’ படத்தில் அஜித் நடித்தபோது எடுத்த பழைய காட்சி என நினைத்துவிடாதீர்கள்… தற்போது ‘‘குட்-பேட்-அக்லி’’ திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிதான் இது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா ஆகியோர் நடித்துள்ள ‘‘குட்பேட் அக்லி’’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில், அஜித் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் சுனிலுடன் அஜித் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை ‘‘அமர்க்களம்’’ பாடலுடன் பதிவிட்டு அஜித் ரசிகர்களை அதகளப்பட வைத்துள்ளார்.
Thank you #Ajith sir for Giving me this lifetime opportunity , DREAM FULL-FILLED . Love you so much sir ❤️🙏🏻 Last day shoot for sir💥🔥💥🔥 whata beautiful journey #GoodBadUgly ❤️😍 pic.twitter.com/kyfI3GUcnM
பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே அஜித் காட்சி தரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அஜித்தின் இளவயது தோற்ற காட்சிகளை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.