Connect with us

உலகம்

நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் சாவு – தாய்லாந்தில் சம்பவம்!

Published

on

Loading

நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் சாவு – தாய்லாந்தில் சம்பவம்!

தாய்லாந்தில் பெருமளவானவர்கள் கூடியிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
பண்டிகையொன்றை குறிக்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தின் வடபகுதி டக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடாந்தம் இடம்பெறும் பண்டிகை நிகழ்வின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்துள்ள 48 பேரில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மக்கள் நடனமாடிக்கொண்டிருந்த இடத்தில் வெடிபொருள் விழுந்து வெடித்ததில், காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன