சினிமா
பாலிவுட்டில் குத்தாட்டம் போட்ட அட்லீ! அட்ராசிட்டி வீடியோ வைரல்!

பாலிவுட்டில் குத்தாட்டம் போட்ட அட்லீ! அட்ராசிட்டி வீடியோ வைரல்!
இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பேபி ஜான். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் இயக்குநர் அட்லீ போட்ட ஆட்டம் தமிழ் ரசிகர்களிடத்தே அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. “பாலிவுட்டில் கலக்கும் அட்லீ” என்று அந்த டான்ஸ் வீடீயோவை ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் இறுதி எபிசோட் நடைபெறுகிறது அதில் வருண் தவான், வாமிகா கபி, கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் அட்லீ உள்ளிட்ட பேபி ஜானின் நட்சத்திர நடிகர்கள் கலந்துகொண்டார்கள். அதில் பேபி ஜான் திரைப்படத்தின் பாடலுக்கு நடிகர் வருண் தவான் ஆடவே அவருடன் சேர்ந்து இயக்குநர் அட்லீ குத்தாட்டம் போட்டுள்ளார். அதனை பார்த்து கீர்த்தி சுரேஷ் உட்பட படக்குழுவினர் கைதட்டி ரசித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரிமேக்காக உருவாகி உள்ளது பேபி ஜான் திரைப்படம். இதனை தற்போது இயக்குனர் அட்லீ-பிரியாஅட்லீ தயாரிப்பில் தயாரித்துள்ளார். வருண் தவான், வாமிகா கபி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 25ம் திகதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.