சினிமா
விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் முத்தழகு! எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட பூஜைகள்

விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் முத்தழகு! எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட பூஜைகள்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ஷோபனா.முத்தழகு சீரியல் கிராமத்து கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வந்ததோடு இதில் இடம்பெற்ற திருப்பங்கள், சுவாரஸ்யம் பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் ஒளிபரப்பாகின.d_i_aஎனினும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையிலேயே இந்த சீரியல் சட்டென முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரை ஒளிபரப்பானது.இந்த நிலையில், முத்தழகு சீரியலில் நடித்த நடிகை சோபனா புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘பூங்காற்று திரும்புமா..?’ என்ற சீரியலில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த சீரியலில் மோதலும் காதலும் சீரியலில் நடித்து பிரபலமான சமீர் நாயகனாக நடிக்க உள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த புதிய தொடருக்கான பூஜைகளும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே முத்தழகாக இதுவரை ரசிகர்களை கவர்ந்த சோபனா, பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.