இந்தியா
வெளுத்து வாங்கிய கனமழை… கொடைக்கானலில் உருவான தற்காலிக நீர்வீழ்ச்சி… சுற்றுலா பயணிகள் குஷி!

வெளுத்து வாங்கிய கனமழை… கொடைக்கானலில் உருவான தற்காலிக நீர்வீழ்ச்சி… சுற்றுலா பயணிகள் குஷி!
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கன மழை, மற்றும் மிதமான மழை என மாறி மாறி பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகளுக்குச் செல்லும் ஓடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்திலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள எலி வால் அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை நீர் வீழ்ச்சி, மூலையாரு அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளியை உருக்கி கொட்டியது போல நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் மலைகளின் இளவரசியை மெருகூட்டும் விதமாக புலிச்சோலை, செண்பகனூர், பெருமாள்மலை, பேத்துப்பாறை, மேல்மலை கிராமங்களான போளூர், கூக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே புதியதாக சிறு சிறு அருவிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக தோன்றி நீர்வீழ்ச்சி நகரமாகவே பசுமை போர்த்திய மலைப்பகுதிகள் மாறி, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது, இந்த அருவிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் நீரை கண்டு பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.