இந்தியா
25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் : வெற்றிபெற்றவர்கள் யார், யார் ?

25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் : வெற்றிபெற்றவர்கள் யார், யார் ?
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் சங்கத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த 1972ஆம் ஆண்டு சென்னை பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதன்பின் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையிலான குழு சென்னை பத்திரிகையாளர் சங்கத் தேர்தலை நடத்தியது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மொத்தம் 91.21% வாக்குகள் பதிவாகின.
1371 பேர் வாக்கு செலுத்திய நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்று, பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தலைவர் பதவிக்கான போட்டியில் சுரேஷ் வேதநாயகம் மொத்தம் 659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக மதன் 599 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட அசீப் முகமது 734 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட மணிகண்டன் 803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.