வணிகம்
Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடில் அமைக்க வொர்க் ஸ்டார்ட்… பொருட்கள் விற்பனை ஜோர்…

Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடில் அமைக்க வொர்க் ஸ்டார்ட்… பொருட்கள் விற்பனை ஜோர்…
Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடில் அமைக்க வொர்க் ஸ்டார்ட்… பொருட்கள் விற்பனை ஜோர்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், வருகிற ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர்.
இதையொட்டி, பண்டிகைக் காலம் தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
இதற்காகக் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் அருகில் உள்ள கிறிஸ்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, ஸ்டார்கள் தொங்கவிட்டு, அதனை மின்விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது.
அதனைக் குறிக்கும் விதமாக வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிடவும் மேலும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் குடில் அமைத்து அதில் குழந்தை இயேசு மாதா போன்ற சிற்பங்கள் சிற்பங்கள் வைக்கவும், குடில்களை அலங்காரம் செய்வதற்காக அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக வீடுகள் மற்றும் தேவாலயங்களைப் பிரம்மாண்டமாக அலங்கரிப்பர்.
மேலும், குமரி மாவட்டங்களில் பல லட்சங்கள் செலவில் பிரம்மாண்டக் குடில்களும் கட்டப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அதற்கான பொருட்கள் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகைக்காகக் குடில் அமைக்கப் பயன்படும் தருவைப்புல் மற்றும் சுக்குநாரி செடிகள் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு மக்கள் மட்டும் இன்றி கேரள மக்களும் அதிக அளவில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.