Connect with us

இலங்கை

தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் பயணம் செய்த புலி! நெகிழ்ச்சி சம்பவம்

Published

on

Loading

தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் பயணம் செய்த புலி! நெகிழ்ச்சி சம்பவம்

ரஷ்யாவை சேர்ந்த ஒரு புலி தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ரஷ்யாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.

Advertisement

இந்த இரண்டு புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து

வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர். 

எனினும், அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றி திரிந்துள்ளது.

Advertisement

இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்

போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன.

Advertisement

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன