இந்தியா
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் – தொடர் போராட்டங்கள் நடத்த மக்கள் போராட்டம்

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் – தொடர் போராட்டங்கள் நடத்த மக்கள் போராட்டம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக கூறப்படும், மதுரை அரிட்டாபட்டி மலை மீது, இரவில் நூற்றுக்கணக்கான மக்கள் அமர்ந்து போராட்டம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மதுரை அரிட்டாபட்டி கிராமத்தில் சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான சுரங்க குத்தகை குறித்த ஏல அறிவிப்பு வெளியானதை அடுத்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மற்றொருபுறம் அரிட்டாபட்டி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி, அரிட்டாபட்டி மலை மீது கூடிய 500-க்கும் மேற்பட்ட மக்கள், போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
சுரங்க திட்டத்தை கைவிடும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வரை கிராமத்திலேயே வெவ்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். போராட்டம் மற்றும் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ஒருசிலர் தெரிவித்தனர்.