Connect with us

இந்தியா

“மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” – இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா

Published

on

“மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” - இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா

Loading

“மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” – இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில், இன்று காலை இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பிறகு இலங்கை அதிபரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா இருவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டாலர்களை கடன் மற்றும் மானிய உதவியாக வழங்கியுள்ளது. வளர்ச்சி ஒத்துழைப்பின் அடிப்படையில், மாதோ-அனுராதபுரம் இரயில் பிரிவு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் சமிக்ஞை முறைமையைப் புனரமைப்பதற்கு மானிய உதவி வழங்கப்படும் எனத் தீர்மானித்துள்ளோம். கல்வி வளர்ச்சியில், அடுத்த ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கிழக்கு மாகாண மாணவர்களுக்கும் என மாதம் 200 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1500 இலங்கை அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும். வீடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், இலங்கையில் விவசாயம், பால்பண்ணை மற்றும் மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா ஒத்துழைக்கும். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கும்.

Advertisement

எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம். கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கான ஒரு முக்கியமான தளம் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் கீழ், கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற தலைப்புகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியபோது அது இலங்கையிலும் கொண்டாடப்பட்டது. படகு சேவை மற்றும் சென்னை-யாழ்ப்பாணம் விமான இணைப்பு ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இலங்கையின் பௌத்த சுற்று மற்றும் ராமாயணப் பாதை மூலம் சுற்றுலாவின் மகத்தான ஆற்றலை உணரும் பணியும் செய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். ஜனாதிபதி திசநாயக்கா அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை பற்றி என்னிடம் கூறினார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisement

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா, “இலங்கை அதிபரான பிறகு இதுதான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு, இது எனது வெளிநாட்டுப் பயணம். எனது முதல் மாநிலப் பயணமாக டெல்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட முழு தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடிக்கும் குடியரசுத் தலைவர் முர்முவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழி வகுத்துள்ளது. இந்தியாவின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன். இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாகச் செழிக்கும், மேலும் இந்தியாவுக்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன