இந்தியா
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்; முதலீடில் கிடைக்கும் நன்மைகள்

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்; முதலீடில் கிடைக்கும் நன்மைகள்
சமீபத்திய, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதிக்கான விகிதங்களின்படி, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வைப்பு நிதிகளில் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சேமிப்பு பலன்களைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை (FD) என்பது ஒரு நிலையான கால வைப்புத் திட்டமாகும், இது மூத்த குடிமக்களுக்கு (60 வயது அல்லது அதற்கு மேல்) அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த நிலையான வைப்பு நிதிகள் மூலம், மூத்த குடிமக்கள் நம்பகமான வருமான ஆதாரத்தைப் பெற முடியும்.
இந்த கட்டுரையில், எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ஒருவர் ரூ.2 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் முதலீடுகளில் எவ்வளவு பெறலாம் என்பது பற்றி பார்ப்போம். அதற்கு முன், நிலையான வைப்புத்தொகையின் நன்மைகளைப் பார்ப்போம்.
சந்தை ஏற்ற இறக்கம் நிலையான வைப்பு நிதியை பாதிக்காது என்பதால் நிலையான வைப்புத்தொகைகள் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வைப்பு நிதிகளில் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சேமிப்பு பலன்களைப் பெறலாம்.
பெரும்பாலான வங்கிகள் வழக்கமான வைப்பு நிதிகளை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
வைப்பு நிதிக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எந்த கால அளவையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
சில வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி-கள் (NBFC) 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி, அம்ரித் விருஷ்டி திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களில் 7.75 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.19,859 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.2,19,859 கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.39,718 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.4,39,718 கிடைக்கும்.
மூத்த குடிமகன் ஒருவர், அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.6 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.59,577 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.6,59,577 கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.8 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.79,436 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.8,79,436 கிடைக்கும்.