Connect with us

இந்தியா

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை ஆதரிக்கும் நாடாளுமன்றக் குழு: எம்.எஸ்.பி உத்தரவாதத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவு

Published

on

pm kissan wheat farmer

Loading

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை ஆதரிக்கும் நாடாளுமன்றக் குழு: எம்.எஸ்.பி உத்தரவாதத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவு

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் (பி.எம்-கிசான்) ஆண்டு ஊதியத்தை தற்போது ரூ. 6,000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கவும் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இது கடந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் மையமாக இருந்தது.ஆங்கிலத்தில் படிக்க: Parliamentary Panel backs key farmer demands: Double PM-Kisan payout, legal backing for MSP guaranteeகாங்கிரஸ் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கான நிலைக்குழு, மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ‘மானியங்களுக்கான கோரிக்கைகள் (2024-25) குறித்த தனது முதல் அறிக்கையில் (பதினெட்டாவது மக்களவை) இந்தப் பரிந்துரைகளை செய்துள்ளது.வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பெயரை ‘விவசாயம், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் நலத்துறை’ என மாற்றவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது.“பி.எம் – கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.12,000/ ஆக அதிகரிக்கப்படலாம். தற்போது ரூ.6,000/-லிருந்து. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பருவகால ஊக்கத்தொகை குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று இந்த குழு கருதுகிறது. விவசாய நிர்வாகத்தை சீரமைக்கவும், விவசாயத்தில் பணிபுரிபவர்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யவும், அதன் மூலம் இந்தியாவில் விவசாய வளர்ச்சிக்கு மேலும் உள்ளடக்கிய அணுகுமுறையை வளர்க்கும் ஒரு பெரிய முயற்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்றும் ‘விவசாயம், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் நலத்துறை’ என்று பெயர் மாற்றத்திற்கு குழு கடுமையாக பரிந்துரைக்கிறது.“விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி-யை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட விவரங்களை சட்டப்பூர்வ உத்தரவாதமாக விரைவில் அறிவிக்க வேண்டும் என்று குழு கடுமையாக பரிந்துரைக்கிறது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.விவசாயம் தொடர்பான வர்த்தகக் கொள்கையை அறிவிப்பதற்கு முன் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று கூறிய குழு, “விவசாய விளைபொருட்கள் மீதான சர்வதேச இறக்குமதி – ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் நாடாளுமன்றக் குழு கருதுகிறது. சி.ஏ.சி.பி [விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன்] ஒரு நிரந்தர அமைப்பு/நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், விவசாய நிபுணர்களுடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் தவறாமல் அதில் சேர்க்கப்படலாம் என்றும் இந்த குழு கடுமையாக பரிந்துரைக்கிறது.விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உரிமைகளை வழங்குவதற்காக, விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரக் கூலிக்கான தேசிய ஆணையத்தை விரைவில் அமைக்கவும் இந்த குழு பரிந்துரைத்தது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (பி.எம் – ஜே.ஏ.ஒய் – PM – JAY) என்ற மத்திய அரசின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின்படி 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு கட்டாய உலகளாவிய பயிர்க் காப்பீட்டை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. இது அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது.பி.எம் – கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 வரை அதிகரிக்க பரிந்துரைத்த குழு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பருவகால ஊக்கத்தொகை குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று கூறியது.பி.எம் – கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயி குடும்பங்கள் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 ஆக 3 தவணைகளில் (ஒவ்வொரு தவணையிலும் ரூ. 2,000) பெறுகின்றனர். பிப்ரவரி 24, 2019-ல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்டது, பி.எம் – கிசான் திட்டத்திற்கு 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன