இந்தியா
Aavin | ஆவினில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வகை பால் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Aavin | ஆவினில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வகை பால் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த 12 ஆம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அதிக புரதச்சத்து மிக்க, வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால், டிசம்பர் 18 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆவின் நிறுவனம் பாலின் அளவையும் குறைத்து, விலையையும் அதிகமாக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-25-ஆம் நிதியாண்டில் 30 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால், சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தப் பாலானது விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவு குறைக்கப்படவில்லை எனவும் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.