இந்தியா
Exclusive update: இந்தியாவில் ஒரே நாளில் அதிக மழை பதிவாகிய இடம்.. தமிழ்நாட்டில் தான் இருக்கு..!!

Exclusive update: இந்தியாவில் ஒரே நாளில் அதிக மழை பதிவாகிய இடம்.. தமிழ்நாட்டில் தான் இருக்கு..!!
இந்தியாவில் அதிக மழை பொழிவு
தென் தமிழக மாவட்டத்தில் கடந்த மூன்று நாளாக அதிக கன மழை மற்றும் பெருவெள்ளம் இருந்து வந்தது. வட கிழக்கு பருவமழையின் போது தென் தமிழகத்தில் அதிகம் மழை பதிவாகியபகுதிகள் மற்றும் இந்தியாவில் ஒரே நாளில் அதிக மழை பதிவாகிய இடம் குறித்து விளக்குகின்றார் தென்காசிவானிலை ஆய்வாளர் ராஜா. டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறி வட இலங்கை அருகே நகர்ந்தது.
பின்னர் அதன் நகர்வில் சற்று மாறுதல் ஏற்பட்டு தெற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக டிசம்பர் 12 முதல் தமிழ்நாட்டில் மழை தீவிரமடைந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெருமழை பதிவானது. டிசம்பர் 13 ஆம் தேதி மட்டும் தென் மாவட்டங்களில் 50 இடங்களில் அதிகனமழை பதிவானது. தமிழகத்தின் அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலத்தில் தமிழகம் பெற்ற மழை அளவு 560 மிமீ. இது இயல்பை விட 37% அதிக மழையாகும்.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே அதிகமழை பெறும் பகுதி நெல்லை மாவட்டம் மாஞ்சோலை ஆகும். இந்த மாஞ்சோலையில் மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய மலை கிராமங்கள் இந்தியாவிலேயே அதிகமழை பெறும்.
இங்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 2500 மிமீ மழையை சராசரியாக பெறுகிறது. இந்த பகுதியில் டிசம்பர் 13,14,15 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மாஞ்சோலையை அடுத்த ஊத்து 859 மிமீ மழையை பெற்றுள்ளது. இது இந்தியா அளவில் அன்றைய நாட்களில் பதிவான அதிகப்பட்ச மழையாகும். இந்த தகவல்களை நம்முடைய பகிர்ந்து உள்ளார் தென்காசி வானிலை ஆய்வாளர் ராஜா.