Connect with us

இந்தியா

அம்பேத்கர் பற்றி சர்ச்சைப் பேச்சு… அமித்ஷாவின் புது விளக்கம்!

Published

on

Loading

அம்பேத்கர் பற்றி சர்ச்சைப் பேச்சு… அமித்ஷாவின் புது விளக்கம்!

அம்பேத்கர் குறித்து பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று (டிசம்பர் 17) பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது. அம்பேத்கர் என்று சொல்வதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொல்லியிருந்தால் சொர்கத்துக்காவது போகலாம்” என்று கூறியிருந்தார்.

Advertisement

இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Advertisement

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தவெக தலைவர் விஜய் வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று (டிசம்பர் 18) டெல்லியில் பத்திரிகையாளரை சந்தித்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அவர், “நேற்று முதல் காங்கிரஸ் கட்சி தனது வஞ்சக யுக்தியை மீண்டும் கையாண்டு, உண்மைகளை திரித்து, பொய்யை உண்மை என்ற போர்வையில் அணிவித்து, சமூகத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

மல்லிகார்ஜுன கார்கே நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு அதுதான் மகிழ்ச்சி என்றால் நான் ராஜினாமா செய்கிறேன்.
ஆனால் காங்கிரஸ் இன்னும் 15 ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் இடத்தில்தான் உட்காரும். என்னுடைய ராஜினாமா எந்த விதத்திலும் காங்கிரஸுக்கு உதவாது.

நாடாளுமன்றத்தில் நான் பேசியது திரிக்கப்பட்டுள்ளது. உண்மையை திரிக்கும் பழக்கம் காங்கிரஸுக்கு உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி பேசியதையும் காங்கிரஸ் திரித்து கூறியிருக்கிறது.

அவர்கள் ஏஐ மூலம் எனது பேச்சை திரித்து வெளியிட்டுள்ளனர். ஊடகங்கள் எனது முழு பேச்சையும் வெளியிட வேண்டும். அம்பேத்கரை ஒரு போதும் அவமதிக்காத ஒரு கட்சியில் இருந்து நான் வந்திருக்கிறேன்.

Advertisement

ஊடகங்கள் மக்களிடம் உண்மையை கொண்டு போய் சேர்க்க வேண்டும். எனது முழு உரையும் மாநிலங்களவையில் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கரை இழிவுப்படுத்தியவர்கள் இன்று அவரது பெயரிலேயே பொய்யை பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது, அம்பேத்கருக்கு எதிரானது,

எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் எப்படி குழப்பப்பட்டது என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை” என்று காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன