இந்தியா
இந்திய ரயில்வேயில் புதிய டெக்னாலஜி.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

இந்திய ரயில்வேயில் புதிய டெக்னாலஜி.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!
பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்திய ரயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பல பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வரும் ரயில்வே துறை, தற்போது தண்டவாள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் இன்டகிரெடட் ட்ராக் மானிட்டரிங் சிஸ்டத்தை (ITMS) ஆய்வு செய்தார். இதன் மூலம் நாட்டின் ரயில்வே நெட்வொர்க் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பட்ட டெக்னாலஜி ஆனது அதிநவீன கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்தி ட்ராக் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ITMS என்பது 20 kmph முதல் 200 kmph வரையிலான வேகத்தில் டிராக் கண்டிஷன்களை கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட வாகனமாகும். இந்த வாகனத்தில் லேசர் சென்சார்கள், அதிவேக கேமராக்கள், அக்ஸிலரோமீட்டர் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இது ரியல் டைம், கான்டெக்ட்லெஸ் டேட்டா சேகரிப்பை வழங்குகிறது. இந்த அமைப்பு ரயில்வேயின் டிராக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்துடன் (டிஎம்எஸ்) இன்டகிரெடட் செய்யப்பட்டுள்ளது. இது எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் உடனடி எச்சரிக்கைகளை வழங்குகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, இந்திய ரயில்வே அனைத்து 17 ரயில்வே ஸ்சோன்களிலும் ஐடிஎம்எஸ் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு சுமார் ரூ.180 கோடி செலவிடப்படும் எனத் தெரிகிறது. தற்போது நாடு முழுவதும் ஏழு ITMS வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 10 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கும் சுமார் ரூ.18 கோடி செலவாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
துல்லியமான டேட்டாகளுக்கு மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தப்படுகிறது.
எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் குறைபாடுகள் பற்றிய உடனடி அறிவிப்புகளை அனுப்புகிறது.
ட்ராக் மேல் ஏதேனும் பொருட்கள் அல்லது விரிசல் இருந்தாலோ, அந்த குறைபாடுகளைக் கண்டறிந்து தகவல்களை அனுப்புகிறது.
ITMS வாகனங்களில் ரயில் பாதை தொடர்பான டேட்டாகளை சேகரிக்க மேம்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மனிஷ் பாண்டே தலைமையிலான ADJ இன்ஜினியரிங் நிறுவனத்தால் ITMS உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது ரெயில் இன்ஸ்பெக்ஷன் மற்றும் அல்ட்ராசோனிக் ரெயில் டெஸ்டிங் போன்ற புதுமையான அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. இதன் மூலம் ரயில் விபத்துகள் கணிசமாக குறையும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இது தவிர பயணிகளை பாதுகாப்பாக அவர்களது இடங்களுக்கு அழைத்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.