இந்தியா
“செஸ் சாம்பியன் குகேஷிற்கு வரி சலுகை வேண்டும்” – மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

“செஸ் சாம்பியன் குகேஷிற்கு வரி சலுகை வேண்டும்” – மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
உலக செஸ் சாம்பியன் குகேஷ் வென்ற பரிசுத்தொகைக்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் மக்களவை உறுப்பினர் சுதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்ற 11 கோடி ரூபாய் பரிசுத்தொகையில், 4 கோடி ரூபாய்க்கும் வரி செலுத்தும் சூழல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்த வரிச்சலுகையை போன்று, குகேஷிற்கும் தற்போது வரிச்சலுகை வழங்க வேண்டும் என சுதா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
குகேஷிற்கு வரிச்சலுகை அளிப்பது, இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் சுதா குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசை போன்று, மத்திய அரசும் பரிசுத்தொகை அறிவித்து, குகேஷை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என சுதா எம்.பி. தனது கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.