இந்தியா
“பிரமாண்ட மணி, சூலம் சூழ்ந்து காட்சி கொடுக்கும் பொற்பனை முனீஸ்வரர்” – நடுசாமத்தில் நடைபெறும் விநோத வழிபாடு…

“பிரமாண்ட மணி, சூலம் சூழ்ந்து காட்சி கொடுக்கும் பொற்பனை முனீஸ்வரர்” – நடுசாமத்தில் நடைபெறும் விநோத வழிபாடு…
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்கள் வைத்து, அந்த வேண்டுதல்கள் பலித்தவுடன் விற்பனைக்கோட்டை முனீஸ்வரருக்கு மணி கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்தது, காக்கும் தெய்வமாக பொற்பனை கோட்டை முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் அந்தக் கோயிலின் சுவாரசியமான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் பல்வேறு சிறப்புகளையும் அற்புதங்களையும் கொண்டதாக இருக்கிறது. நேர்த்திக்கடனாக மணி கட்டுதல், பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தல், கிடா வெட்டுதல் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக திருமணம் நடைபெறவேண்டுமென்றால், குழந்தை வரம் கிடைக்க, தீராத நோய் தீர, தொழில் வளர்ச்சி போன்றவற்றை வேண்டிக் கொண்டால் அதனை முனீஸ்வரர் நடத்திக் கொடுப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் பல கோடி பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா நடைபெறும். பொற்பனைக்கோட்டையில் பனை தானே முளைத்து தானே மறைந்ததனால் “தானாக முளைத்த முனீஸ்வரர்” என்ற முக்கிய சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது.