இலங்கை
உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியில்லை!

உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியில்லை!
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டதன் பின்னரும் மற்றும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்ட போதும் அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பணியாளராக இருந்தார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.
உபாலி பன்னிலகே, பொதுக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக இருப்பதால், அரசமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கோ அல்லது நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கோ தகுதியற்றவர் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேள்விக்குட்படுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.