Connect with us

தொழில்நுட்பம்

கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; இஸ்ரோ 3 வார விண்வெளி பயிற்சி திட்டம்: எப்படி அப்ளை செய்வது?

Published

on

ISO Recruitment 2019, ISRO Job Notification 2019,

Loading

கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; இஸ்ரோ 3 வார விண்வெளி பயிற்சி திட்டம்: எப்படி அப்ளை செய்வது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வருடாந்திர விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START) திட்டத்தின் மூலம் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.START-2025 என்ற நிகழ்ச்சி மூலம் இஸ்ரோ முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு விண்வெளி பயிற்சி திட்டம் வழங்க உள்ளது.இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பு மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் 3 வாரம் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்த திட்டம் விண்வெளியில் வேரூன்றியிருந்தாலும், ஆர்வமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற மிகவும் உற்சாகமான மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் தொழில் பாதைகளை ஆராய்வதற்கான ஒரு பாலத்தையும் வழங்குகிறது. எப்படி அப்ளை செய்வது?இந்த திட்டத்திற்கு தகுதியான நபர்கள் https://jigyasa.iirs.gov.in/START  என்ற இணையதளம் மூலம் டிச.31, 2024க்குள் அப்ளை செய்ய வேண்டும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன