Connect with us

இந்தியா

கேன்சருக்கு தடுப்பூசிக் கண்டுபிடித்த ரஷ்யா; இலவசமாக தர முடிவு

Published

on

கொரோனா தடுப்பூசி :  வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை

Loading

கேன்சருக்கு தடுப்பூசிக் கண்டுபிடித்த ரஷ்யா; இலவசமாக தர முடிவு

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா கூறியுள்ளது.உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  உயிரிழக்கின்றனர். மருத்துவத்தில் பல தொழில்நுட்பங்கள் வந்தபோதிலும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சிக்கலாகவே இருந்து வந்தது.புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துவதால், தற்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கிறது.AI மற்றும் நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங் உதவியுடன், இந்த நடைமுறைகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உருவாக்கி விடலாம் என்று ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் கூறினார்.விரைவில் கேன்சர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்றும் புதின் தெரிவித்துள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன