இந்தியா
டாப் 10 நியூஸ் : ஈரோட்டில் முதல்வர் கள ஆய்வு முதல் கியாவின் புதிய எஸ்யூவி அறிமுகம் வரை!

டாப் 10 நியூஸ் : ஈரோட்டில் முதல்வர் கள ஆய்வு முதல் கியாவின் புதிய எஸ்யூவி அறிமுகம் வரை!
ஈரோடு மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக இன்றும் (டிசம்பர் 19) நாளையும் இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் செல்கிறார்.
அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து அவரை பதவி விலகக் கோரி தமிழ்நாடு உட்பட இன்று நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.
தி
மாவட்ட அளவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பூர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. அது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று வழங்க உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பாட்டார். இந்த வழக்கில் இன்று முதல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்குகிறது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எஸ்யூவி கார் மார்க்கெட்டை அலங்கரிக்கும் விதமாக கியா (Kia) நிறுவனம், சிரோஸ் (Syros) என்ற தனது புதுமுக கார் மாடல் ஒன்றை இன்று அறிமுகம் செய்கிறது.
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.49க்கும் விற்பனையாகி வருகிறது.