இந்தியா
“நான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமை.. ஆனால்?” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“நான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமை.. ஆனால்?” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
கோவையில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி, தன்னை கிறிஸ்துவர் என நினைத்தால் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என நினைத்தால் இஸ்லாமியர், இந்து என நினைத்தால் இந்து என தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர், மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், அதை சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று தெரிவித்தார்.
எனினும், நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்ற உதயநிதி, எப்போதும் அப்படித்தான் இருப்பேன் என்றும் கூறினார்.
#JUSTIN
நீங்கள் என்னை கிறிஸ்தவராக நினைத்தால் கிறிஸ்தவன், முஸ்லீமாக நினைத்தால்
முஸ்லீம், இந்து என்று நினைத்தால் இந்து;
நான் எல்லாருக்கும் பொதுவானவன் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #UdhaynidhiStalin #Coimbatore #News18Tamilnadu |https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/tC7SDvYEuN
இதற்கிடையே, கோவை தடாகம் சாலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மற்றும் வேலைவாய்ப்பு மைய தொடக்க விழாவிலும் அவர் கலந்துகொண்டார். 29 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான மையங்களை அவர் தொடங்கி வைத்தார்.