Connect with us

சினிமா

நைசாக கீர்த்தி சுரேஷை பொண்ணு கேட்டாரா விஷால்? வெளிவந்த உண்மை!

Published

on

Loading

நைசாக கீர்த்தி சுரேஷை பொண்ணு கேட்டாரா விஷால்? வெளிவந்த உண்மை!

நடிகர் விஷால் பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். வரலட்சுமி சரத்குமாருடன் காதலில் விஷால் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது திருமணத்தை நோக்கி செல்லவில்லை. தற்போது, வரலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

பின்னர் அனிஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதோடு நின்றும் போனது. இந்த நிலையில், நடிகர் விஷால் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய முயன்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக் கோழி 2 படத்தில் விஷாலும் கீர்த்தியும் இணைந்து நடித்தனர். அப்போது, விஷால் கீர்த்தி சுரேஷின் குணத்தில் மயங்கி போயுள்ளார். பின்னர், கீர்த்தி சுரேஷின் வீட்டுக்கு சென்று, ’எனக்கு உங்கள் மகளை திருமணம் செய்ய விருப்பமாக உள்ளது. உங்களுக்கு சம்மதமா?’ என்று கேட்டுள்ளார்.

ஆனால், கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார், தற்போது எங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை. கொஞ்சம் காலம் ஆகட்டும் என்று கூறி விஷாலை அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டு கால காதலர் ஆண்டனி தாட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். நேற்று முதன் முதலில் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் வெள்ளை வேட்டி , சட்டை அணிந்து புது மண தம்பதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்ட கீர்த்தி, ’எங்களது கனவுக்குரிய திருமணத்தை நமது கனவு நாயகன் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்… என்றும் அன்புடன் உங்கள் நண்பி நண்பன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

திருமணமான 20 நாளில் விபத்தில் மரணமடைந்த தம்பதி… ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட சோகம்!

’கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லை’ : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன