இலங்கை
பதவியில் நான் இருந்திருந்தால் நடப்பதே வேறு- டக்ளஸ் காட்டம்!

பதவியில் நான் இருந்திருந்தால் நடப்பதே வேறு- டக்ளஸ் காட்டம்!
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நான் இருந்திருந்தால் அரச அதிகாரிகளைக் கேலி செய்யும் வகையில் கருத்துத் தெரிவித்தவரை சபையில் மன்னிப்புக்கோர வைத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட முறை, நடந்துகொண்ட முறை பிழையானது என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் உரிய முறையில் நெறிப்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவராக நான் இருந்திருந்தால், அவ்வாறு செயற்பட்டவரை மன்னிப்புக் கோர வைத்திருப்பேன் அல்லது அவரைச் சபையில் இருந்து வெளியேற்றிருப்பேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.