Connect with us

இந்தியா

மும்பை படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

மும்பை படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

மும்பை கடற்கரையில் நேற்று மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகே நேற்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட13 பேர் உயிரிழந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் கடற்படை வீரர் ஒருவரும் கடற்படை கப்பலில் இருந்த மேலும் இருவரும் அடங்குவதாகவும், குறைந்தது 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து கடலோர காவல்படை மற்றும் கரையோர‍ே பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படை கப்பல்கள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் மூன்று கரையோர பொலிஸ் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தனியார் படகிலிருந்து மீட்கப்பட்ட பயணி ஒருவரின் தகவலுக்கு அமைவாக, படகில் பயணித்த எவருக்கும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே மும்பை துறைமுகத்தில் என்ஜின் சோதனையின் போது இந்திய கடற்படைக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்ட நிலையில், கடற்படை விரைவுப் படகு ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன