Connect with us

இலங்கை

முல்லைத்தீவில் கரையொதுங்கிய நாட்டுப்படகு தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

Loading

முல்லைத்தீவில் கரையொதுங்கிய நாட்டுப்படகு தொடர்பில் வெளியான தகவல்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19-12-2024) காலை மியன்மார் அகதிகள் சுமார் 100 மேற்பட்டோருடன் நாட்டுப்படகு ஒன்று கரையொதுங்கியது.

Advertisement

குறித்த படகில் சிறுவர்கள், கற்பிணி பெண் உட்பட்ட 100 ற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.

மியன்மாரில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு நாட்டுகளில் தஞ்சங்கோருவதற்கு குறித்த மக்கள் நாட்டுப்படகில் புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக காற்று இழுவை அதிகமாக இருந்ததால் படகு இலங்கையை நோக்கி தள்ளப்பட்டதன் காரணமாகவே குறித்த கப்பல் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியுள்ளது.

Advertisement

குறித்த படகில் இருப்பவர்கள் சுமார் 10 நாட்களாக கப்பலில் இருந்ததனால் உணவுகள் எதுவும் இன்றி அவதிப்பட்டுள்ளனர், சிலர் மயக்கமும் அடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த விடயம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட மக்களால் உலருணவு பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் மதிய உணவு வழங்கினர்.

Advertisement

குறித்த நாட்டுப்படகை முள்ளிவாய்க்கால் கரைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் கடற்படையினரின் கப்பல் உதவியுடன் அதனை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன