இந்தியா
Vijay: விஜயின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது? – உளவுத்துறைக்கு அண்ணாமலை கேள்வி

Vijay: விஜயின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது? – உளவுத்துறைக்கு அண்ணாமலை கேள்வி
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.
மேலும் பேசிய அண்ணாமலை, “விஜய் யார்கூட வேண்டுமானாலும் போகலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அந்த புகைப்படத்தை எடுத்தது.. மற்றவர்களின் பிரைவேட் புகைப்படத்தை எடுப்பதுதான் மாநில உளவுத்துறையின் வேலையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜய் புகைப்படம் வெளியானது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
“விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி மூலம் போட்டோ எடுத்து அதை திமுக ஐடி விங்குக்கு கொடுத்தது யார் என்பது தொடர்பாக விசாரிக்க புகார் கொடுக்க இருக்கிறோம். யார் போட்டோ எடுத்து, யாருக்கு அனுப்பினார்கள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் திமுக காட்டக்கூடிய அரசியல் நாகரிகமா” என்றும் அண்ணாமலை வினவினார்.