பொழுதுபோக்கு
காதலி தூங்கும்போது கூட அழகுதான்: கண்ணதாசன் மாறுபட்ட பாடல்: எம்.ஜி.ஆர் சாவித்திரி ஜோடிக்கு எப்படி?

காதலி தூங்கும்போது கூட அழகுதான்: கண்ணதாசன் மாறுபட்ட பாடல்: எம்.ஜி.ஆர் சாவித்திரி ஜோடிக்கு எப்படி?
காதலி தூங்கும்போது அவளது அழகை ரசிக்கும் காதலன் ஆசையில் பாடும் ஒரு பாடலை எழுதிய கண்ணதாசன், அந்த பாடலில் புதுமையை புகுத்தி இன்றும் கேட்டு ரசிக்ககூடிய ஒரு பாடலான கொடுத்திருக்கிறார். குறிப்பாக இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் அறிமுகமாகி தொடந்து, சினிமாவில் துணை கேரக்டரில் நடித்த எம்.ஜி.ஆர், 1947-ம் ஆண்டு தனி ஹீரோவாக உருவெடுத்த நிலையில், 1957-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் மகாதேவி. சாவித்ரி நாயகியாக நடித்த இந்த படத்தில் சந்திரபாபு, பி.எஸ்.வீரப்பா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்தனர்.இந்த படத்திற்கு திரைக்கதை எழுதிய கவியரசர் கண்ணதாசன், 3 பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் வரும் முக்கிய பாடல் தான், ‘கண்மூடும் வேளையிலே கலை என்ன கலையே, கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே’ என்ற பாடல். எம்.ஜி.ஆருக்கு பாடகர் ஏ.எம்.ராஜா பாடிய வெகுசில பாடல்களில் இதுவும் ஒரு பாடல். இந்த இரு வரிகளை வைத்து பல கவிஞர்கள் இன்றைக்கு பல பாடல்கள் எழுதியிருந்தாலும், இந்த பாடல் காலம் கடந்து நிற்கிறது.ஒருவன் விழித்திருக்கும்போது எவ்வளவு அழகாக இருந்தாலும், தூங்கும்போது. சற்று அலங்கோலமாகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்த பாடலில், காதலன் தனது காதலி தூங்கும் அழகை பார்த்து ரசித்து ஒரு பாடலாக பாடுவார். தூங்கும்போது கூட காதலி, எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று காதலன் சொல்ல, பூனை மாதிரி வந்துவிட்டு, போகிறாயே, என்று காதலி பாட, கண்ணதாசன் இந்த பாடலை சிறப்பாக எழுதியிருப்பார்.அதேபோல் காதலன் காதலி இருவருக்கும் இடையே இருக்கும் உறவில் இந்த உலத்தில் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை என்பது போல், இருவரும் மாறி மாறி உலகை உனக்கு எழுதி தருகிறேன் என்று பாடியிருப்பார்கள். இந்த பாடல் இன்ஸ்பிரேஷனில் எழுதிய பாடல் தான் நெஞ்சினிலே படத்தில் வரும் ‘தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என்ற பாடல் உருவாகி இருக்கிறது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியுள்ளார்.