Connect with us

இந்தியா

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 325 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Published

on

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 325 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Loading

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 325 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Advertisement

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 325 பேருந்துகளும், நாளை 280 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை மொத்தம் 81 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைப்போல, மாதவரத்திலிருந்து இன்றும் நாளையும் மொத்தம் 20  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
– அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #WeekendOperationpic.twitter.com/RVH5BkzPHA

Advertisement

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன