Connect with us

இந்தியா

“பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை நீக்கும் வாழைப்பூ” – வாழைப்பூ உசிலி செய்றது எப்படி தெரியுமா?

Published

on

வாழைப்பூ உசிலி 

Loading

“பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை நீக்கும் வாழைப்பூ” – வாழைப்பூ உசிலி செய்றது எப்படி தெரியுமா?

வாழைப்பூ உசிலி 

Advertisement

வாழைப்பூவில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய, ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு குறைக்க, வயிறு பிரச்சனைகள் சரிசெய்ய, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக வாழைப்பூ இருக்கிறது.

எளிதாக கிடைக்கும் வாழைப்பூவை வைத்து வாழைப்பூ வடை, வாழைப்பூ கூட்டு போன்றவை செய்து சுவைத்து இருப்போம். அதேபோல் வாழைப்பூ வைத்து செய்யப்படும் வாழைப்பூ உசிலி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

 

Advertisement

வாழைப்பூ-1, கெட்டியான மோர் – 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி, பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம்-2, துவரம் பருப்பு-50 கிராம், பயத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய்-6, கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி.

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை நீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர், அதனுடன் பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்தால் உதிரியாகிவிடும். வாழைப்பூவை நறுக்கி மோரில் போட்டு எடுத்துப் பிறகு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி வைத்து வெந்த வாழைப்பூ. உதிர்த்த பருப்பு போட்டு வதக்கி கீழே இறக்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன