Connect with us

இந்தியா

Government Jobs: “NHM திட்டத்தில் உள்ளூர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு” – இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

Published

on

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.. 

Loading

Government Jobs: “NHM திட்டத்தில் உள்ளூர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு” – இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.. 

Advertisement

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 5 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், தகுதிகள், விண்ணப்பிக்க கடைசி நாள் போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

1. TNHSRP Scheme தர மேலாளர் (Quality Manager) பணி.

2. TAEI Scheme – கதிர்ப்பட பதிவாளர் (Radiographer) பணி

3. DEIC Scheme ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் (Early interventionist cum Special Educator) பணி காலியாக உள்ளது

Advertisement

4. DEIC Scheme கணினி பகுப்பாய்வாளர் (System Analyst) பணி காலியாக உள்ளது.

5. Cemone Scheme – பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) பணி காலியாக உள்ளது

காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது, ஒப்பந்த மாத ஊதியம், காலிப் பணியிட விபரம் மற்றும் விண்ணப்பம் முதலானவற்றை https://pudukkottai.nic.in என்ற இணையதள வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகம், முள்ளூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.12.2024 மாலை 5.00 மணி வரை மட்டுமே என்றும் அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என்றும் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன