இந்தியா
உடல் உறுப்பு தானத்தில் முன்னிலையில் தமிழ்நாடு.. அமைச்சர் பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் முன்னிலையில் தமிழ்நாடு.. அமைச்சர் பெருமிதம்!
நியூஸ் 18 தமிழ்நாடு மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்த நபர்களுக்கு மருத்துவ விருதுகளை கொடுத்து கவுரவித்தது இதில் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தமிழக அரசின் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கக்கூடிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அவசரகால சிறப்பு சிகிச்சை பிரிவு தலைவர் கோமதி கார்மேகம் அவர்களுக்கும், தெங்குமரகடா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான விருதும், செவிலியர் இலக்கியா விற்கு சிறந்த செவிலியர் கான விருதும் கொடுத்து கவுரவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது இது மேலும் அவர்களது பணியை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்றார்.
தமிழக சுகாதாரத்துறை இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த ஓராண்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட உறுப்பு தானங்களை செய்து உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார்.
மக்களே தேடி மருத்துவத்தில் இரண்டு கோடியாவது பயனாளர்க்கு மருத்துவப் பெட்டகங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளார் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் அவசர சிகிச்சைக்கு 48 மணி நேரத்திற்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் அது மேலும் அதிகரித்து 2 லட்சமாக முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளார். மேலும் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிறந்த பங்களிப்பை தனியார் மருத்துவமனைகளும் வழங்கி வருகிறது அவர்களையும் தமிழக அரசு விரைவில் கௌரவிக்க உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.