Connect with us

இந்தியா

ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம்

Published

on

ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம்

Loading

ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம்

ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா (89) இன்று குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Advertisement

ஹரியானா மாநில அரசியலில், ஓம் பிரகாஷ் சௌதாலா குடும்பம் மிகவும் முக்கியமானதும், பிரபலமானது. ஓம் பிரகாஷுக்கு முன்பாக அவரது தந்தை தேவி லாலில் இருந்து அவர்களின் அரசியல் பயணம் துவங்குகிறது.

மத்தியில் ஜனதா தள் ஆட்சி அமைந்தபோது, அந்த ஆட்சியில் தேவி லால் துணை பிரதமராக பதவி வகித்தவர். இது மட்டுமின்றி, 1996ல் ஹரியானா தனி மாநிலமாக உருவாகியதில் தேவி லாலின் பங்கு மிகவும் முக்கியமானது.

தந்தை தேவி லால், மகன் ஓம் பிரகாஷ் மட்டுமின்றி, ஹரியானா அரசியலில் ஓம் பிரகாஷின் மகன்கள் அஜய் சிங் சௌதாலா மற்றும் அபய் சிங் சௌதாலா மற்றும் அவரது பேரன்கள் அர்ஜுன் சௌதாலா மற்றும் துஷயந்த் சௌதாலா ஆகியோரும் ஹரியானா மாநில அரசியலில் பங்காற்றியவர்கள்.

Advertisement

இதில், அபய் சிங் ஹரியானா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இவரது மகன் அர்ஜுன் சௌதாலா தற்போது எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.

அஜய் சிங் சௌதாலாவின் மகன் துஷயந்த் சௌதாலா மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்த பா.ஜ.க – ஜே.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக செயல்பட்டவர்.

பல்வேறு வகையில் ஹரியானா அரசியலில் கவனம் பெற்ற ஓம் பிரகாஷ் சௌதாலா, குறுகிய காலம் மற்றும் முழு ஆட்சிக் காலம் என ஐந்து முறை ஹரியானா மாநில முதல்வராகப் பதவி வகித்தவர்.

Advertisement

1935ம் ஆண்டு பிறந்த ஓம் பிரகாஷ் சௌதாலா, 1989ம் ஆண்டு அவரது தந்தை தேவி லால் இந்தியாவின் துணை பிரதமரான பிறகு முதல் முறையாக ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பிறகு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதன்பிறகே மக்கள் பிரதிநிதியாக முதல்வர் பொறுப்பேற்றார். ஏழு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிரகாஷ் சௌதாலா, ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தார். இதில், 1999 முதல் 2005 வரை தொடர்ந்து இருமுறை முதல்வராகச் செயல்பட்டார்.

ஏழு முறை எம்.எல்.ஏ., ஐந்து முறை முதல்வர், இரு முறை தொடர்ந்து முதல்வர் என பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், அவரது அரசியல் வாழ்வில் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் எனும் பெயரும் பெற்றார்.

Advertisement

ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த ஊழலில் கடந்த 2013-ம் ஆண்டு ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிறகு கடந்த மார்ச் மாதம் 2020-ம் ஆண்டு கோவிட் தொற்று நேரத்தில் அவசர கால பரோலில் வெளியே வந்தார். அதன்பிறகு தொடர்ந்து அவருக்குப் பரோல் வழங்கப்பட்டு வந்தது.

இதே சமயத்தில் 2021-ம் ஆண்டு கோவிட் காரணமாக சிறையில் அதிக நபர்களை வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஒன்பது ஆண்டு ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்களை ஆறு மாதத்திற்கு முன்பாக விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பரோலில் இருந்துவந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது சிறை தண்டனையை நிறைவு செய்து விடுதலையானார்.

அதன்பிறகு அவர் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் வசித்துவந்தவருக்கு இன்று பிற்பகல் நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன