வணிகம்
காப்பீடு, உணவு விநியோகம் மீதான வரி குறைப்பு: ஒத்திவைத்த ஜி.எஸ்.டி கவுன்சில்

காப்பீடு, உணவு விநியோகம் மீதான வரி குறைப்பு: ஒத்திவைத்த ஜி.எஸ்.டி கவுன்சில்
ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகியவை மீதான வரிக் குறைப்பை ஜி.எஸ்.டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளதாக பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், இதே திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: GST Council defers proposal to lower tax on insurance premiums, food delivery ஜெய்சால்மரில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 148 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி விகித மாற்றங்களை பரிந்துரைத்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார். இதேபோல், ஸ்விக்கி மற்றும் ஜோமட்டோ போன்றவை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுவதில் வரிக் குறைப்பு தொடர்பான திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.”அறிக்கை தொடர்பாக மற்றுமொரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் கருதினர். குழு காப்பீடு, தனி நபர் காப்பீடு அல்லது மூத்த குடிமக்கள் காப்பீடு என எதுவாக இருந்தாலும் அடுத்த கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பாக விவாதம் நடத்தப்படும்” என சௌத்ரி தெரிவித்துள்ளார்.காப்பீட்டு பிரீமியங்கள் மீதான வரிக் குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து சில அமைச்சர்கள் கவலை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளள.மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டிற்காக செலுத்தும் பிரீமியங்கள் மற்றும் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸுக்கு அனைவரும் செலுத்தும் பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிப்பது குறித்து அமைச்சர்கள் குழு முன்பு விவாதித்தது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி, குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட திட்டங்கள் உள்பட அனைத்து நபர்களுக்கும் விலக்கு அளிக்க விவாதிக்கப்பட்டது. கவரேஜ் தொகையை பொருட்படுத்தாமல் மூத்த குடிமக்கள் செலுத்தும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு விலக்கு அளிக்கப்படுவதும் பரிசீலனையில் உள்ளது. மற்ற குடிமக்களுக்கு, ரூ. 5 லட்சம் வரையிலான உடல்நலக் காப்பீடு விலக்கு அளிக்கப்படும் என்று கருதப்பட்டது. ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கு, தற்போதுள்ள 18 சதவீத விகிதம் தொடரும்.இதனிடையே, உப்பு மற்றும் மசாலா கலந்த பாப்கார்ன்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியும், பேக் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி வரியும், இனிப்பு கலந்த காரமெல் பாப்கார்ன்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுகிறது.மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மீதான 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.